Breaking News

4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு TN Half Yearly Exams 2023 Postponed

அட்மின் மீடியா
0
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க கீழ்க்காணும் அறிவிக்கை வெளியிடப்படுகிறது. 
 

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.

இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியதின் அடிப்படையில் இச்செய்தி குறிப்பு வெளியிடப்படுகிறது.

 


Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback