3 குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றம் செய்யும் மசோதா வாபஸ் பெற்றது மத்திய அரசு! முழு விவரம் Withdraws Bills Introduced To Replace IPC, CrPC & Evidence Act
Withdraws Bills Introduced To Replace IPC, CrPC & Evidence Act இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்றம் செய்யும் முடிவை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவிப்பு!
மேலும் புதிய திருத்தங்களுடன் 3 மசோதாக்களையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று குளிர்கால கூட்ட தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சட்டங்களில் இந்திய என்ற வார்த்தையை பாரதிய என்று மாற்றுவதற்கு சட்டத்திருத்தம் செய்ய கடந்த மாதம் மக்களவையில் மசோதா தாக்கல் செய்தார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதன்படி
இந்திய தண்டனை சட்டம் (IPC), இந்திய சாட்சிகள் சட்டம் (IEA), குற்றவியல் நடைமுறை சட்டம் (CPC) ஆகியவற்றின் பெயரை பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷ சன்ஹிதா என மாற்றுவதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
பாரதிய என மாறும் இந்திய சட்டங்கள்
▶ இந்திய தண்டனை சட்டம் - பாரதிய நியாய சன்ஹிதா
▶ இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் - பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா
▶ இந்திய சாட்சிகள் சட்டம் - பாரதிய சாக்ஷ்யா
▶ Bharatiya Nyaya Sanhita to replace Indian Penal Code.
▶ Bharatiya Nagarik Suraksha Sanhita to replace Code of Criminal Procedure.
▶ Bharatiya Sakshya to replace Indian Evidence Act. 1
1860-ல் இந்திய தண்டனை சட்டம் உருவாக்கப்பட்டது. 1898-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை இயற்றப்பட்டுள்ளது. 1872-ல் இந்திய சாட்சிய சட்டம் இயற்றப்பட்டது ஆகும்
இந்நிலையில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்றம் செய்யும் முடிவை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது!
நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகளுடன் மீண்டும் அவை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சான்று சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்றும் மசோதா தாக்கல் செய்ததை கண்டித்து எதிர்க்கட்சிகள் மற்றும் சட்டத்துறையினரின் ஒட்டுமொத்த எதிர்ப்பால், முடிவை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகளுடன் மீண்டும் அவை அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்