Breaking News

டிசம்பர் 27 ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு local holiday

அட்மின் மீடியா
0

டிசம்பர் 27 ம் தேதி கடலூர் மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வரும் 27ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கடலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சிதம்பரம் அருள்மிகு நடராஜர் திருக்கோவில் (அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில்) ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான 27.12.2023 - புதன்கிழமை, கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான 06.01.2024-சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும், உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் 27.12.2023 (புதன்கிழமை) அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback