Breaking News

ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கையும் களவுமாக கைது!

அட்மின் மீடியா
0

திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மருத்துவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.


அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் மருத்துவர் ஒருவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து லஞ்ச பணத்தை கொடுக்க திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அந்த மருத்துவர் நின்று கொண்டிருந்த நிலையில், இதனை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மறைந்து இருந்து ரகசியமாக கண்காணித்துள்ளனர்.

இந்த நிலையில், அங்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அந்த மருத்துவரிடம் இருந்து லஞ்சமான 20 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். உடனடியாக அங்கித் திவாரியை கையும் களவுமாக கைது செய்தனர். பிடிபட்ட அங்கித் திவாரி என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback