Breaking News

தமிழகத்தில் 16 மற்றும் 17 ம் தேதி 9 மாவட்டங்களில் கன மழை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 16 மற்றும் 17 ம் தேதி 9 மாவட்டங்களில் கன மழை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வரும் டிசம்பர் மற்றும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 16 மற்றும் 17 ம் தேதி 9 மாவட்டங்களில் கன மழை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை மிக்ஜாம் புயல் காரணமாக அதிக கனமழையாகப் பெய்து பெரும் சேதம் விளைவித்தது.தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மீண்டு வரும் சூழ்நிலையில் மீண்டும் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அரபிக் கடலில் உருவாகியுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் 

கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழையும், நாளை (டிச. 15) மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

அதேபோல் 16, 17-ம் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback