ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் விடுமுறை | 2024 அட்டவணை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகளுக்கு 2024ஆம் ஆண்டில் எந்தெந்த நாட்களில் விடுமுறை விடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக முதன்மை செயலாளர் ஹர் சஹாய் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து நியாய விலை கடைகளுக்கும் வரும் 2024 ஆண்டில் பொது பண்டிகை அல்லது விடுமுறை நாட்கள் எவை என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
1 பொங்கல் 15.01.2024 திங்கள்கிழமை அன்று விடுமுறை
2 தைப்பூசம் 25.01.2024 வியாழன்கிழமை அன்று விடுமுறை
3 குடியரசு தினம் 26.01.2024 வெள்ளிகிழமை அன்று விடுமுறை
4 ரம்ஜான் 11.04.2024 வியாழன்கிழமை அன்று விடுமுறை
5 தமிழ் புத்தாண்டு 14.04.2024 ஞாயிறுகிழமை அன்று விடுமுறை
6 மே தினம் 01.05.2024 புதன்கிழமை அன்று விடுமுறை
7 சுதந்திர தினம் 15.08.2024 வியாழன்கிழமை அன்று விடுமுறை
8 விநாயகர் சதுர்த்தி 07.09.2024 சனிகிழமை அன்று விடுமுறை
9 காந்தி ஜெயந்தி 02.10.2024 புதன்கிழமை அன்று விடுமுறை
10 விஜய தசமி 12.10.2024 சனி கிழமை அன்று விடுமுறை
11 தீபாவளி 31.10.2024 வியாழன் கிழமை அன்று விடுமுறை
12 கிறிஸ்துமஸ் 25.12.2024 புதன் கிழமை அன்று விடுமுறை
அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்