தமிழகத்தில் 11,12 ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு என தகவல்
தமிழகத்தில் 11,12 ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு என தகவல்
தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்தது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4, ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்படது , அதேபோல் இன்றும் 5 ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது
அதே போல் புயல் ஓய்ந்தும் வெள்ளநீர் வடியாததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.அதனால் மக்களின் இயல்பு வாழ்வை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வை ஒத்தி வைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
Tags: தமிழக செய்திகள்