Breaking News

தமிழக அரசில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு Record clerk வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு Record clerk வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்



கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுறு எழுத்தர் (Record Clerk) பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

 கல்வி தகுதி:-

ரெக்கார்ட் கிளர்க் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 

அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 

வயது வரம்பு:-

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொதுப்பிரிவினர் என்றால் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்

B.C ,M.B.C 2பிரிவினருக்கு 34 வயதுக்குள் இருக்க வேண்டும்

அதேபோல் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 37 வயதிற்க்குள் இருக்க் வேண்டும்

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 42 வயதிற்க்குள் இருக்க் வேண்டும்

மாத சம்பளம்:-

அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். 

ரெக்கார்ட் கிளர்க் பணிக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை சம்பளம் வழங்கப்படும். 

நிபந்தனைகள்:

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

3. விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

4. சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10x4 Inches Postal Cover) ភ្នំ បំបŮL 64.

5. தகுதியில்லாத நிராகரிக்கப்படும். மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள்

6. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

7. அரசு விதிகளின்படி மேற்கொள்ளப்படும். இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது ஆணையாளர், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் 606201 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 11.12.2023 முதல் 21.12.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான வெளியிடப்பட்டுள்ளது. https://www.kallakurichi.nic.in என்ற இணையதளத்தில்

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://kallakurichi.nic.in/notice_category/recruitment/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback