ஜனவரி 1 முதல் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என பரவும் தகவல் உண்மை என்ன முழு விவரம் Banks 5 days working
Banks 5 days working ஜனவரி 1 முதல் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என பரவும் தகவல் உண்மை என்ன முழு விவரம்
வங்கி ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்களைக் கொண்டு பணி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் முன்மொழிவை வைத்துள்ளனர். அதாவது அனைத்து சனிக்கிழமையும் அதிகாரப்பூர்வ விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (ஐபிஏ) சார்பில் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் பதில் அளிக்கையில், வாரம் 5 பணி நாட்கள் என்ற கோரிக்கையை வங்கிகள் முன்வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால் மத்திய அமைச்சர் அளித்த பதிலில் அந்தக் கோரிக்கை நிதி அமைச்சகத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை
இதற்க்கிடையில் பல செய்திநிறுவனங்கள் ஜனவரி 1 முதல் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை.. இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில், ஜனவரி 1 முதல் வங்கிகளில் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அமல்படுத்த மத்திய அரசு திட்டம் என செய்திகள் வெளியாகி வருகின்றது
ஆனால் இதுவரை மத்திய அரசோ, மத்திய நிதி அமைச்சர், மற்றும் ரிசர்வ் வங்கி என யாரும் ஜனவரி 1 முதல் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை
அந்த செய்தி ஒரு யூகம் மட்டுமே மேலும் அப்படி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கி பணி என அறிவித்தாலும் அதில் அவர்களின் பணி நேரம் நீட்டிக்க பட வாய்ப்புகள் இருக்கும் என தெரிகின்றது
Tags: FACT CHECK இந்திய செய்திகள்