Breaking News

phonepe metro ticket போன் பே செயலியில் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

அட்மின் மீடியா
0

போன் பே செயலியில் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் போன் பே செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதியை சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். 

மும்பை, டெல்லி, மெட்ரோவை தொடர்ந்து சென்னை மெட்ரோவிலும் தற்போது போன் பே செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இச்செயலியில் நீங்கள் உங்கள் மெட்ரோ பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்

கூடிய விரைவில் மாதாந்திர, தினசரி பாஸ் வாங்கவும், உங்கள் மெட்ரோ ஸ்மார்ட் கார்டு ரீசார்ஜ் செய்தல் ஆகிய சேவைகளும் செயல்படுத்த இருக்கிறது.

 


போன் பே செயலியில் மெட்ரோ டிக்கெட்:-

உங்கள் போன் பே செயலில் Switch  அல்லது transit  பகுதியில் உள்ள சென்னை மெட்ரோ என்பதை கிளிக் செய்து அதில் உங்கள் டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம்

அதில் நீங்கள் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்து பணம் செலுத்தி டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேலும் ஒரு முன்பதிவில் அதிகபட்சம் 6 டிக்கெட் எடுத்து கொள்ளலாம். 

மேலும் போன் பே ஆப் மூலம் மெட்ரோ டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு 20% கட்டண தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback