5 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? வெளியானது கருத்துக்கணிப்பு Exit Poll Results 2023
இந்தியாவில் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் ஆட்சி காலம் முடிவடைந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது
இந்நிலையில் தற்போது பல்வேறு தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது.அதில் பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றே அறிவித்துள்ளது
அதன்படி சத்தீஸ்கர், தெலுங்கனா, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும் , ராஜஸ்தானில் பாஜக கட்சி ஆட்சியை பிடிக்கும் எனவும், மிசோராமில் மாநில கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
5 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என டிசம்பர் 3 ஆம் தேதி தெரிந்துவிடும்
மத்திய பிரதேச மாநில கருத்துக்கணிப்பு:-
மத்தியபிரதேசம் மாநிலத்தில் மொத்தம் 230 சட்டமன்ற தொகுதிகள் அதில் பெரும்பான்மை இடங்கள் கிடைக்க 116 சட்டமன்ற தொகுதிகள் தேவை
டிவி 9 கருத்துக்கணிப்பின்
படி, காங்கிரஸ் கட்சி 111 முதல் 121 இடங்கள் கைபற்றும் எனவும், 106 முதல் 116 இடங்களை பாஜக அணி கைப்பற்றும் எனவும் 2 இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெறும் என கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது
ஜன்கிபாத் கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் கட்சி 102 முதல் 125 இடங்கள் கைபற்றும் எனவும், 102 முதல் 123 இடங்களை பாஜக அணி கைப்பற்றும் எனவும் 5 இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெறும் என கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது
Polstrat கருத்துக்கணிப்பின்
படி, காங்கிரஸ் கட்சி 97 முதல் 107 இடங்கள் கைபற்றும் எனவும், 118
முதல் 130 இடங்களை பாஜக அணி கைப்பற்றும் எனவும் 5 இடங்களில் மற்ற கட்சிகள்
வெற்றி பெறும் என கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது
ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் கட்சி 111 முதல் 121 இடங்கள் கைபற்றும் எனவும், 106 முதல் 116 இடங்களை பாஜக அணி கைப்பற்றும் எனவும் 6 இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெறும் என கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது.
தெலுங்கானா மாநில கருத்துக்கணிப்பு
தெலுங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் அதில் பெரும்பான்மை இடங்கள் கிடைக்க 60 சட்டமன்ற தொகுதிகள் தேவை
தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது
இந்தியா டிவி கருத்துக்கணிப்பின்
படி, காங்கிரஸ் கட்சி 63 முதல் 79 இடங்கள் கைப்பற்றும் எனவும், 2 முதல் 4 இடங்களை பாஜக அணி கைப்பற்றும் எனவும் பிஆர்எஸ் கட்சி 31 முதல் 41 இடங்களை கைப்பற்றும் எனவும் 7 இடங்களில் மற்ற கட்சிகள்
வெற்றி பெறும் என கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது
ஜன்கிபாத் கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் கட்சி 48 முதல் 64 இடங்கள் கைப்பற்றும் எனவும், 7 முதல் 13 இடங்களை பாஜக அணி கைப்பற்றும் எனவும் பிஆர்எஸ் கட்சி 40 முதல் 45 இடங்களை கைப்பற்றும் எனவும் 7 இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெறும் என கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது
ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் கட்சி 58 முதல் 68 இடங்கள் கைப்பற்றும் எனவும், 4 முதல் 9 இடங்களை பாஜக அணி கைப்பற்றும் எனவும் பிஆர்எஸ் கட்சி 46 முதல் 56 இடங்களை கைப்பற்றும் எனவும் 7 இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெறும் என கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது
சத்தீஸ்கர் மாநில கருத்துக்கணிப்பு
சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் அதில் பெரும்பான்மை இடங்கள் கிடைக்க 46 சட்டமன்ற தொகுதிகள் தேவை
இந்தியா டுடே கருத்துக்கணிப்பின்
படி, காங்கிரஸ் கட்சி 40 முதல் 50 இடங்கள் கைப்பற்றும் எனவும், 36 முதல் 46 இடங்களை பாஜக அணி கைப்பற்றும் எனவும் 5 இடங்களில் மற்ற கட்சிகள்
வெற்றி பெறும் என கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது
ஜன்கிபாத் கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் கட்சி 42 முதல் 53 இடங்கள் கைப்பற்றும் எனவும், 34 முதல் 45 இடங்களை பாஜக அணி கைப்பற்றும் எனவும் 3 இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெறும் என கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது
சி-வோட்டர் கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் கட்சி 41 முதல் 53 இடங்கள் கைப்பற்றும் எனவும், 36 முதல் 48 இடங்களை பாஜக அணி கைப்பற்றும் எனவும் 4 இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெறும் என கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது
இந்தியா டிவி கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் கட்சி 46 முதல் 56 இடங்கள் கைப்பற்றும் எனவும், 30 முதல் 40 இடங்களை பாஜக அணி கைப்பற்றும் எனவும் 6 இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெறும் என கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது
மிசோரம் மாநில கருத்துக்கணிப்பு
மிசோரம் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் அதில் பெரும்பான்மை இடங்கள் கிடைக்க 46 சட்டமன்ற தொகுதிகள் தேவை
ஜன்கிபாத் கருத்துக்கணிப்பின் படி, மிசோ தேசிய முன்னணி கட்சி 10 முதல் 14 இடங்களை கைப்பற்றும் எனவும் காங்கிரஸ் கட்சி 5 முதல் 9 இடங்கள் கைப்பற்றும் எனவும், ஜோரம் மக்கள் இயக்க கட்சி 15 முதல் 25 தொகுதிகள் கைபற்றும் எனவும் 2 இடங்களை பாஜக அணி கைப்பற்றும் என கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது
இந்தியா டிவி கருத்துக்கணிப்பின் படி, மிசோ தேசிய முன்னணி கட்சி 10 முதல் 14 இடங்களை கைப்பற்றும் எனவும் காங்கிரஸ் கட்சி 5 முதல் 9 இடங்கள் கைப்பற்றும் எனவும், ஜோரம் மக்கள் இயக்க கட்சி 15 முதல் 25 தொகுதிகள் கைபற்றும் எனவும் 2 இடங்களை பாஜக அணி கைப்பற்றும் என கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது
ராஜஸ்தான் மாநில கருத்துக்கணிப்பு
ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகள் அதில் பெரும்பான்மை இடங்கள் கிடைக்க 101 சட்டமன்ற தொகுதிகள் தேவை
TV9 கருத்துக்கணிப்பின்
படி, காங்கிரஸ் கட்சி 90 முதல் 100 இடங்கள் கைப்பற்றும் எனவும், 100 முதல் 110 இடங்களை பாஜக அணி கைப்பற்றும் எனவும் 15 இடங்களில் மற்ற
கட்சிகள்
வெற்றி பெறும் என கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது
ஜன்கிபாத் கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் கட்சி 62 முதல் 85 இடங்கள் கைப்பற்றும் எனவும், 100 முதல் 122 இடங்களை பாஜக அணி கைப்பற்றும் எனவும் 15 இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெறும் என கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது
டைம்ஸ்நவ் கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் கட்சி 56 முதல் 72 இடங்கள் கைப்பற்றும் எனவும், 108 முதல் 128 இடங்களை பாஜக அணி கைப்பற்றும் எனவும் 21 இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெறும் என கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது
இந்தியா டிவி கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் கட்சி 46 முதல் 56 இடங்கள் கைப்பற்றும் எனவும், 30 முதல் 40 இடங்களை பாஜக அணி கைப்பற்றும் எனவும் 6 இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெறும் என கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்