18 தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
திருச்செந்தூர் மாவட்டத்தில் சுப்பிரமணியசாமி திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு நவ.18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவிற்கு அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இவ்விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 18ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்