RSS பயிற்சி முகாமில் மாணவர் ஒருவர் அடித்து சித்ரவதை செய்யப்படும் வீடியோ என பரவும் வதந்தி! உண்மை என்ன! sitapur gurukul acharya brutally beats student
அட்மின் மீடியா
0
RSS பயிற்சி முகாமில் மாணவர் ஒருவர் அடித்து சித்ரவதை செய்யப்படும் வீடியோ என பரவும் வதந்தி உண்மை என்ன sitapur gurukul acharya brutally beats student
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் RSS பயிற்சி முகாமில் மாணவர் ஒருவர் அடித்து சித்ரவதை செய்யப்படுவதாக ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் காவி வேட்டி அணிந்த சிறுவர்கள் பலர் கூட்டமாக நின்று கொண்டு இருக்கின்றனர். அதில் ஒரு சிறுவனை ஒருவர் கன்னத்தில் அறைந்து பின்னர் கொம்பால் கடுமையாக அடிக்கின்றார், அந்த சிறுவன் வலி தாங்காமல் அழுகின்றான்
அந்த வீடியோவுடன் RSS பயிற்சி முகாமில் மாணவர் ஒருவர் அடித்து சித்ரவதை செய்யப்படும் வீடியோ என தலைப்பிட்டு ஷேர் செய்து வருகின்றார்கள்
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது,
மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சுமார் 2 மாதங்களுக்கு முந்தையது எனவும்
RSS பயிற்சி முகாம் இல்லை எனவும் உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் (Sitapur) சமஸ்கிருத பள்ளி ஆசிரியர் எனவும் அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
முழு விவரம்:-
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள கிஷோரி சமஸ்கிருத குடியிருப்புப் பள்ளி சமஸ்கிருத ஆசிரியர் சதீஷ் ஜோஷி என்பவர் 2 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் ஒரு மாணவரை அடித்துள்ளார்,
ஆனால் அந்த வீடியோ தற்போது 09.10.2023 அன்று தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆச்சார்யா மீது போலீசார் தாக்குதல் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்மாணவர் பள்ளியை விட்டு ஓடிவிட்டதாகவும் பிறகு அவர் கண்டுபிடிக்கப்பட்டதும் கோபத்தில் அடித்ததாகவும் ஆசிரியர் கூறியுள்ளார். மாணவரைச் சமஸ்கிருத ஆசிரியர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியதையடுத்து சீதாபூர் காவல் துறையினர் அவர்மீது வழக்குப் பதிவு செய்து கைதும் செய்துள்ளனர்
இது தொடர்பாக சீதாபூர் காவல் துறையும் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து வீடியோ பதிவிட்டுள்ளது.
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.bhaskar.com/local/uttar-pradesh/sitapur/news/acharyas-third-degree-in-sitapur-131964234.html
Tags: FACT CHECK மறுப்பு செய்தி