அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின் கட்டணம் குறைப்பு! தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
குடியிருப்புகளுக்கு மின் கட்டணம் குறைப்பு!
அடுக்குமாடி மற்றும் தனிக்குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ரூ.8-லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மறைமலை நகரில் முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை அருகே நாவலூரில் உள்ள கட்டண சாலையில் நாளை (அக்.,19) முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது.
மேலும் அடுக்குமாடி குடியிருப்பு, பொது குடியிருப்பு மின் இணைப்புக்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8லிருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும்.
ஆனால், 10 வீடுகளுக்கு குறைவாக லிப்ட் வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்