மின் இணைப்பு எண்ணுடன் மொபைல் எண்ணை ஆன்லைனில் இணைப்பது எப்படி TNEB Mobile Number Registration
உங்கள் மொபைல் எண்ணை மின் கட்டண எண்ணுடன் இணைப்பது எப்படி?
உங்கள் மொபைல் எண்ணை புதுப்பித்து மின்வெட்டுகள் மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் பற்றிய தகவல்களைப் பெறுங்கள்.உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிக்க TANGEDCO இணையதளம்: https://tnebltd.gov.in/mobilenoentry - ஐப் பார்வையிடவும்.என மின் வாரியம் அறிவித்துள்ளது.
நீங்கள் ஏற்கனவே மின் இணைப்பு எண்ணுடன் மொபைல் எண் இணைத்து இருந்து அந்த மொபைல் எண் தொலைந்து விட்டாலோ, அல்லது நீங்கள் புதிய எண் மாற்றி இருந்தாலோ அந்த மொபைல் எண்ணையும் நீங்கள் புதுப்பித்து கொள்ளலாம்
மின் இணைப்பு எண்ணுடன் மொபைல் நம்பர் இணைப்பதால் என்ன பலன்:-
நமது மொபைல் எண்ணை மின் கட்டண எண்ணுடன் இணைத்துவிட்டால் மின் கட்டணம் , கட்ட வேண்டிய கடைசி நாள் போன்ற விவரங்கள் குறுஞ்செய்தியாக வரும்
மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்வாரியத்தால் மின்சாரம் துண்டிக்கப்படும் இதனை முன்னதாக நமது மொபைல் எண்ணுக்கு மின் நிறுத்தம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
மேலும் மின் வாரிய அறிவிப்புகள் முக்கிய தகவல்கள் உங்களுக்கு மெசஜ் அனுப்பப்படும்
தமிழ்நாடு மின் வாரியத்தின் இந்த சேவை அவர்களது மொபைல் எண்ணிற்கு எஸ் எம் எஸ் வாயிலாக வருவதில்லை.
அவர்கள் தங்கள் கைப்பேசி எண்ணை அவர்களது மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து இருக்க மாட்டார்கள். அல்லது அந்த இடத்தில் அதற்கு முன்பு குடியிருந்தவர்களின் மொபைல் எண்ணிற்கு SMS போய்க்கொண்டிருக்கும்.
- மின் இணைப்பு எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி:-
1. உங்கள் பகுதி மின்வாரிய அலுவலகத்தில் சென்று விண்ணப்பித்து இணைக்கலாம்
2. அல்லது நீங்களே மின் வாரிய அதிகாரபூர்வ இணையதளம் மூலமாகவும் உங்கள் மொபைல் எண்ணை இணைக்கலாம்.
- ஆன்லைனில் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி?
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் https://www.tnebltd.gov.in/mobilenoentry/ என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.
அடுது வரும் பக்கத்தில் நீங்கள் விட்டின் உரிமையாளர் / கடை உரிமையாளர் அல்லது வாடகை தாரர் என்பதில் எதை தேர்ந்தெடுக்க் வேண்டுமே அதனை சரியாக தேர்ந்தெடுக்கவும்
அடுத்து அதன் கீழ் உங்கள் மின் இணைப்பு எண்ணை முழுவதுமாக பதிவிடுங்கள்
அடுத்து திரையில் உங்கள் மின் இணைப்புடன் மொபைல் எண் இணைத்து இருந்தால் அதன் கடைசி 5 எண்கள் காட்டப்படும், அந்த எண் உங்களுடையதா என சரிபார்த்து கொள்ளுங்கள், ஒர் வேளை நீங்கள் மொபைல் எண் இணைக்கவில்லை என்றால் அதில் மொபைல் எண் இணைத்து கொள்ளுங்கள்
அல்லது அதில் உள்ள மொபைல் எண்ணை மாற்ற வேண்டும் என்றால் புதிய மொபைல் எண்ணை பதிவ்ட்டு சப்மிட் கொடுங்கள்
அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபியை பதிவிட்டு மின் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ அவர்களின் ஆதார் கார்டை அப்லோடு செய்து ஓக்கே கொடுக்கவும்
அவ்வளவு தான் உங்களுடைய மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்தால், நமது மொபைல் எண் நமது மின் கட்டண எண்ணுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி திரையில் வரும்.
மின் வாரிய அலுவலகத்திற்க்கு சென்று மொபைல் எண் இணைப்பது எப்படி:-
மின் வாரியம் சென்று மின் இணைப்பு விபரங்களுடன் மொபைல் எண்ணை சேர்க்க வேண்டும் என குறிப்பிட்டு விவரங்கள் அளித்தால் அவர்கள் அவர்களது கணினியில் பதிவு செய்து விடுவார்கள்.அவ்வளவுதான்
TNEB Mobile Number Registration
tneb consumer number
Tags: முக்கிய செய்தி