Breaking News

சிங்கப்பூர் அதிபராக தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி ! Tharman Shanmugaratnam

அட்மின் மீடியா
0

சிங்கப்பூர் அதிபராக தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் தேர்வு!


சிங்கப்பூர் நாட்டின் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் 70.4% வாக்குகளைப் பெற்று வெற்றி!

சிங்கப்பூரின் 9-வது அதிபராக தர்மன் சண்முகரத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிங்கப்பூர் அரசின் முன்னாள் துணைப் பிரதமராக இருந்த தர்மன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலில் வென்றதன் மூலம் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார்.அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று சிங்கப்பூரின் 9வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தன்னுடன் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களையும் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் செப்டம்பர் மாதம் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. 

அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் (66) மற்றும் இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். செப்டம்பர் 1 ம் தேதி வாக்கு பதிவு நடந்து அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது  இதில் தர்மன் சண்முகரத்தினம் 70.4% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் கடந்த 2001-ம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback