ஓட்டுநர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய இந்திய அரசின் ராஜ்மார்க் ஆப் சிறப்பம்சங்கள் முழு விவரம் Rajmarg Yatra App
ராஜ்மார்க் யாத்ரா ஆப் என்பது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) ஆகஸ்ட் 5, 2023 அன்று தொடங்கப்பட்டது . இந்த செயலி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் கிடைக்கிறது கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் iOS ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ழ்து கொள்ளலாம்
ராஜ்மார்க் யாத்ரா செயலி:-
நிகழ்நேர போக்குவரத்து அறிவிப்புகள், வானிலை முன்னறிவிப்புகள், பெட்ரோல் பம்புகள், உணவகங்கள் மற்றும் லாட்ஜ்கள் போன்ற அருகிலுள்ள சேவைகள், புகார் தீர்வு சேவைகள், ஃபாஸ்டேக் ஒருங்கிணைப்பு, மின்னணு முறையில் சுங்கவரி செலுத்துவதையும் எளிதாக்குகிறது மேலும் அதற்கேற்ப அவர்களின் பயணங்களைத் திட்டமிடலாம்.
மேலும் பயணிகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் குறித்த விரிவான தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லமல், புகார் தீர்க்கும் முறையையும் வழங்கு கின்றது இந்த ஆப்
ராஜ்மார்க் யாத்ரா செயலி சிறப்பம்சங்கள்:-
அருகே உள்ள சாலையின் வகை,
பயணிக்கும் துாரத்தில் உள்ள சுங்கச்சாவடி அதன் கட்டண விபரம்,
அருகில் உள்ள மருத்துவமனை,
அருகில் உள்ள பெட்ரோல் பங்க்,
உணவு உண்ணும் இடங்கள் மற்றும் ஹோட்டல்களை உள்ளடக்கிய சேவைகளை ஆப்ஸ் பட்டியலிடுகிறது.
தங்கள் பயணங்களுக்கு இடையில் ஓய்வெடுக்கவும் தங்கும் விடுதிகளையும் இது பட்டியல் இடுகின்றது வாடிக்கையாளர்களுக்கு இது நன்மை பயக்கும்.
நெடுஞ்சாலை ஆணைய அவசர கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்
பயணிக்கும் வழியில் உள்ள வானிலை நிலவரங்கள்
மேலும் உங்கள் பயண அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்யலாம்
பயனர்கள் தங்கள் FASTagகளை ரீசார்ஜ் செய்ய முடியும்.
மாதாந்திர பாஸ்களைப் பெற விண்ணப்பிக்கலாம்
FASTag தொடர்பான பிற வங்கிச் சேவைகளை அணுகவும் இதில் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
விதிமுறை மீறி வாகன ஓட்டிகள் பயணித்தால், ஜி.பி.எஸ். வாயிலாக கண்காணிக்கப்பட்டு, டிரைவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படும்
சாலை குறித்த உங்கள் புகாரை அந்த இடத்தின் லோகேஷனை இணைத்து, வீடியோக்கள் அல்லது புகைப்படங்களையும் இணைத்து புகார் அளிக்கலாம்.
இந்த ஆப் குரல் மூலமாக தகவல்களை கூறும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிமுகப்படுத்தியுள்ள இந்த செயலியை நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான, மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும் என்றே சொல்லலாம்
இந்த ஆப் இன்ஸ்டால் செய்து அதில், மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, 'ஓடிபி' கொடுத்து, இ-மெயில் ஐ.டி, இருப்பிடம், வாகன விபரங்களை பதிவு செய்ய வேண்டும் அவ்வளவுதான்
ஆப் டவுன் லோடு செய்ய:-
https://play.google.com/store/apps/details?id=com.nhai.rajmargyatra&hl=en_US
Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி