Breaking News

இது மாதிரி மெசஜ் வந்தா எச்சரிக்கையா இருங்க போக்குவரத்து பைன் இ சலான் மோசடி - பொதுமக்களுக்கு போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை fake e challan scam

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இ சலான் மோசடியை சைபர் மோசடி கும்பல் துவங்கியிருப்பதாக சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக போலி அபராத ரசீதுகளை வாகன ஓட்டிகளுக்கு அனுப்பி பண மோசடியில் ஈடுபடும் அடையாளம் தெரியாத கும்பல் குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில்,

அதிகாரப்பூர்வமாக அபராதம் விதிக்கும் காவல்துறையினர் “echallan.parivahan.gov.in”. என்ற இணையதள முகவரியையே பயன்படுத்துவார்கள். ஆனால், சைபர் மோசடி கும்பல் https://echallanparivahan.in/ என்ற மோசடி இணையதளத்தின் மூலமாகவும் தனியாக ஈமெயில் மற்றும் பணம் செலுத்துமாறு கூறி மோசடி செய்வதாக சென்னை காவல்துறை எச்சரிக்கை உள்ளது.

எனவே போக்குவரத்து அபராதம் விதிக்கும்படி குறுஞ்செய்தி வந்தால் அதை சரி பார்த்து காவல்துறை அபராதம் விதித்துள்ளதா, அதிகாரப்பூர்வ அபராதம் செலுத்தும் இணையதளமா என சரி பார்த்து பொதுமக்கள் பணத்தை செலுத்துமாறு சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.


தற்போது பொதுமக்களின் மொபைல் எண்ணுக்கு பரவலாக குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அதில் போக்குவரத்து போலிசார் அனுப்புவது போல்  இ-சலான் ஒன்றை அனுப்புகின்றார்கள் அதில் வாகனம் சார்ந்த விவரங்கள், இயந்திரம் மற்றும் சேஸ் எண்கள் போன்ற தகவல்கள் இருக்கும் அதில் ஆன்லைனில் அபராதத் தொகையைச் செலுத்துமாறு போலியான இணையதள முகவரியையும் குறிப்பிடுகின்றனர். அதாவது இந்திய அரசின் அபராதம் செலுத்தும் இணைய முகவரியைப் போலவே, மோசடி கும்பல் உருவாக்கியுள்ள அந்த இணையதளம் இருக்கும்

மக்கள் அந்த இணைப்பைக் கிளிக் செய்து போலியான இணையதளத்திற்குச் செல்லும் போது, அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி விவரங்களை திருடி, டெபிட், கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை மொத்தமாக திருடு விடுகின்றனர். 

எனவே இதுபோன்ற போலியாக வரும் குறுஞ்செய்திகளின் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கின்றோம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback