Breaking News

பைக் வருவதை கவனிக்காமல் அலட்சியாக காரின் கதவை திடீரென திறந்த ஓட்டுநர் கீழே விழுந்து பலி வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் ஆகஸ்ட் மாதம் இவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

 

 


இந்நிலையில் கடந்த மாதம் ஆகஸ்ட் 31 அன்று குழந்தையை பார்த்த பிறகு சொந்த ஊருக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கார் திடீரென திறக்கப்பட்டது. 

இதனை சற்றும் எதிர்பார்க்காத சரவணன் நிலை தடுமாறி கார் கதவில் மோதியதில் சரவணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் நாமக்கல் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்தவர் மருத்துவர் சித்ரா என தெரியவந்துள்ளது

இச்சம்பவம் குறித்து நாமக்கல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விபத்து  தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/velmurugantheni/status/1708083532898197722

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback