Breaking News

அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு பாஜக ஐ.டி. விங் தலைவர் அமித் மால்வியா மீது வழக்குப்பதிவு

அட்மின் மீடியா
0

அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு பாஜக ஐ.டி. விங் தலைவர் அமித் மால்வியா மீது வழக்குப்பதிவு

வடமாநிலத்தை சேர்ந்த பாஜக ஐ.டி. விங் தலைவர் அமித் மால்வியா தனது டிவிட்டர் பக்கத்தில், பதிவிடுகையில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். அப்படியானால் அதனை பின்பற்றும் 80 சதவீத இந்து மக்களை இனப்படுகொலை செய்ய சொல்கிறார் என்பனவாறு திரித்து பதிவிட்டு இருந்தார்.

இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக சார்பில், திருச்சி காவல் நிலையத்தில் பாஜக ஐ.டி. விங் தலைவர் அமித் மால்வியா மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பெயரில் 6 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்தூறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த 02.09.23-ந்தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சனாதன தர்மத்தை பற்றி பேசியதாகவும், அவர்பேசிய காணொளியினை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பா.ஜ.க வின் அகில இந்திய தொழில்நுட்ப அணியின் தலைவர் திரு.அமித் மாளவியா அவர்கள் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சை திரித்து 

மாண்புமிகு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதன தர்மத்தை பின்பற்றி வரும் 80 சதவீதம் மக்களின் இன படுகொலைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று பொய் செய்தியினை 02.09.23-ந்தேதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாகவும், இவரின் இந்த பதிவிற்கு மாண்புமிகு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தான் ஒருபோதும் பொதுமக்களின் இனபடுகொலைக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், சனாதன தர்மத்தின் கோட்பாடுகளில் ஜாதி மத பாகுபாடுகள் இருக்கிறது என்றும், 

சமூகநீதி பாதிக்கப்படுகிறது என்றும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசி வருவதாகவும், கொரோனா, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் மனிதர்களுக்கு தீங்கிழைப்பது போல சனாதன தர்மம் சமுதாய தீங்கிற்கு பொறுப்பாகிறது என்றும், எனவே இது போன்ற பொய் செய்திகளை பரப்புவதை நிறுத்தவேண்டும் என்றும், டிவிட்டரில் பதில் பதிவிட்டுள்ளதாகவும், 

மாண்புமிகு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது பேச்சின் சாராம்சத்தை தெளிவாக பதிலளித்த பின்பும் அரசியல் உள்நோக்கத்துடன் அரசயில் சுய லாபத்திற்காகவும் மாண்புமிகு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சை வேண்டுமென்றே திரித்து, தொடர்ந்து இருபிரிவினருக்கு இடையே வன்முறையினை தூண்டும் வகையிலும், மாறுபட்ட கொள்கை கோட்பாடுகளை கொண்ட பல்வேறு பிரிவினருக்கு இடையில் வெறுப்பை தூண்டும் வகையிலும், சகோதரதுவத்தின் மாண்பினை குலைக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வரும் திரு. அமித் மாளவியாவும், அவர் தலைமையில் உள்ள பா.ஜ.க. அகில இந்திய தொழில் நுட்ப அணியினரும் இந்த பொய் செய்தியினை தொடாந்து பரப்பி வருகின்றனர் என்றும், 

சட்டப்படியான நடவடிக்கை எடுக்க கோரி திருச்சிராப்பள்ளி தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் திரு. K.A.V. தினகரன். என்பவர் இன்று 06.09.23-ந்தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் மேற்கண்ட திரு. அமித் மாளவியா என்பவர் மீது மாநகர குற்றப்பிரிவில் சட்டப்பிரிவுகள் 153 (கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டுமென்றே செயல்படுதல்), 153 (A) (வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகையை வளர்தலும், ஒற்றுமைக்கு குந்தகமான செய்கைகளை செய்தலும்), 504 (உட்கருத்துடன் அமைதியின்மையை வேண்டுமென்றே நிந்தித்தல்), 505 (1) (b) (பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல்) இ.த.ச.வின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என குறிப்பிடப்பட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback