Breaking News

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு உதிரி பாகங்கள் ஏற்றி வந்த இழுவை கப்பல் தரை தட்டி நிற்கும் வீடியோ

அட்மின் மீடியா
0

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அணு உலை உதிரி பாகங்கள் ஏற்றி வந்த இழுவை கப்பல், பாறை இடுக்குகளில் சிக்கிய வீடியோ 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி உற்பத்தி செய்யும் எந்திரம் ரஷியாவில் இருந்து கொண்டு வரப்பட்டது.

சுமார் 300 டன் எடை கொண்ட இந்த எந்திரம் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடிக்கு வந்தது. நேற்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இழுவை கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டது. 

இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து சில கடல் மைல்கள் தூரத்தில் இழுவைக் கப்பலுக்கும், மிதவைக் கப்பலுக்கும் இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டது.நீராவி உற்பத்தி எந்திரத்தின் மிதவை அங்குள்ள பாறை இடுக்குகளில் சிக்கி உள்ளது. அதனை சரி செய்யும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

இதனால் மிதவையின் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் இருப்பதினால் அதனை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/Saislakshmanan/status/1700426846947754428

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback