Breaking News

பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம் மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம் மத்திய அரசு அறிவிப்பு




அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிறப்புச் சான்றிதழை, தனி அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம், 2023-ன்படி வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல், பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வாக்காளர் அடையாள அட்டை பெற,  ஓட்டுநர் உரிமம் பெற ,திருமண பதிவு, கல்வி அமைப்புகளில் சேரவும்,அரசு வேலை பெறவும் பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம், 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback