Breaking News

மெட்ரோ ரயில் பயணிகளே உஷார்..ரயில்களின் இயக்கத்தை தடுத்தால் 4 ஆண்டு சிறை

அட்மின் மீடியா
0

மெட்ரோ ரயில்களின் இயக்கத்தை தடுத்தால் 4 ஆண்டுகள் சிறை - மெட்ரோ நிறுவனம் எச்சரிக்கை

 

சென்னை மெட்ரோ ரயில்களின் இயக்கத்தை தடுப்பவா்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் ரயில் மூடிய பிறகு ரயிலின் இயக்கத்தை தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இது தண்டனைக்குரிய குற்றமாகும்.இம்மாதிரியான செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புச் சட்டத்தின்படி 4 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ 5000 அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயிலின் இயக்கத்தைத் தடுப்பது, சிரமத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் யாராவது ஈடுபட்டால், 18604251515 என்ற வாடிக்கையாளா் உதவி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback