உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி மிரட்டல் விடுத்த உ.பி.சாமியார் மீது வழக்கு பதிவு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு பரிசு அறிவித்த அயோத்தி சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு ரூ.10 கோடி பரிசு உ.பி. சாமியார் பரமஹன்ஸ ஆச்சார்யா பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.
சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள். என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி’ என அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாளால் கிழித்து தீயிட்டு கொளுத்தும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வடமாநிலங்களில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/TamildiaryIn/status/1698672464354808248
இந்நிலையில் அயோத்தி சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், மதுரையில் திமுக வழக்கறிஞர் அணி சாமியார் மீது புகார் அளித்தனர்.
இதனையடுத்து சனாதானம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை அறிவித்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த ராமசந்திர தாஸ் பரமஹன்ஸ் ஆச்சார்யா, அவரது வீடியோவை ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட பியூஸ்ராய் ஆகிய இருவர் மீதும் 153, 153A (1)(a),504,505(1)(b), 505(2)& 506(ii) IPC 6 பிரிவுகளின் கீழ் மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்
Tags: தமிழக செய்திகள்