Breaking News

நேற்று 1 ரூபாய்... இன்றே வங்கியில் வந்து சேர்ந்த ரூ.1000 உரிமை தொகை. மகிழ்ச்சியில் குடும்ப தலைவிகள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

நேற்று 1 ரூபாய்... இன்றே வங்கியில் வந்து சேர்ந்த ரூ.1000 உரிமை தொகை. மகிழ்ச்சியில் குடும்ப தலைவிகள் முழு விவரம்



தமிழகத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்க்கான சோதனையாக நேற்று ரூபாய் 1 பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பலருக்கு இன்றே அவர்களது வங்கி கணக்கில் 1000 ரூபாய் வந்துள்ளது இதனால் பலரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 மாதம் தோறும் அளிக்கும் கலைஞர் உரிமை தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மொத்தம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் மகளிர் உரிமை திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான உரிய காரணம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் எஸ்எம்எஸ் ஆக அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தெரிவித்து இருந்தது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு எஸ்எம்எஸ் அனுப்பும் பணிகள் நடந்து வருவதாக தேர்வு செய்த பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில், குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

பயனாளிகள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற தகவல் குறுஞ்செய்தி முலம் அனுப்படவுள்ளதாகவும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1 செலுத்தி நேரடியாக வரவு வைக்கப்படுகிறதா என்பது சோதிக்கப்படவுள்ளது. ஒரு ரூபாய் அனுப்பியவுடன், விண்ணப்பதாரர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தவறான வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத் தொகை சென்று விடக் கூடாது என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் அனுப்பப்படுவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் கைப்பேசி வழியாக விண்ணப்பதாரர்களைத் தொடர்பு கொண்டும் வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் படிப்படியாக ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. திட்டம் நாளை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ள நிலையில் இன்று வங்கி கணக்கில் பணம் வந்துள்ளது.

மேலும் குடும்ப தலைவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரத்யேக கார்டினை வழங்கியுள்ளார். நவீன் சிப் பொருத்தப்பட்ட இந்த கார்டுகள் ஏற்கனவே கணக்கு வைத்திருந்தவர்களுக்கு தரப்படவில்லை. இந்தியாவில் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் குடும்ப தலைவிகள் இந்த கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறுஞ்செய்தி வராத மகளிர் தங்கள் பகுதியில் உள்ள இசேவை மையத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும், இந்த விண்ணப்பங்கள் வருவாய் கோட்டாட்சியரிடத்தில் அனுப்பப்பட்டு பின்னர் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் சிறப்பு செயலாக்கத்துறை அறிவித்துள்ளது.குறுஞ்செய்தி வராத 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், மேல்முறையீடு செய்த 30 நாட்களில் அதற்கான நடவடிக்கை எடுக்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இணையவழி வாயிலாக மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback