இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு சரிந்து விழுந்த வீடுகள் வைரல் வீடியோ Massive landslide in Himachal Pradesh's Kullu
இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு சரிந்து விழுந்த வீடுகள் வைரல் வீடியோ
இமாச்சலப்பிரதேசத்தில் பெய்து வரும் தொடர்மழை, மேகவெடிப்பு,நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக அம்மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
இமாச்சலப்பிரதேசத்தில் தொடர் மழை காரணமாக மாநிலம் முழுவதும் கன மழை பெய்து வருகின்றது இந்நிலையில் குலு மாவட்டத்தில் அன்னி பகுதியில் மழை காரணமாக இன்று ஏற்பட்ட நிலச்சரிவால் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளது.
இந்த நிலச்சரிவில் சுமார் 10 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளது, இந்த நிலச்சரிவு வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இங்கு நிலச்சரிவு ஏற்படும் என பாதிப்பினை முன்னரே கணித்து மாவட்ட நிர்வாகம் இரண்டு நாட்களுக்கு முன்பே கட்டிடங்களில் இருந்தவர்களை காலி செய்ய செய்தது குறிப்பிடத்தக்கது.
மழை நீடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள்
வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/shubhamtorres09/status/1694567168447578457
Tags: இந்திய செய்திகள்