வயதில் குறைவான யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? ரஜினிகாந்த் அளித்த விளக்கம் முழு விவரம்
வயதில் குறைவான யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? ரஜினிகாந்த் அளித்த விளக்கம் முழு விவரம்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் முன்பே இமயமலை சுற்றுபயனம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது சுற்றுபயனம் முடிந்து உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியா உடன் சேர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் திரையரங்கில் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்தார்.
இதனைத்தொடர்ந்து, லக்னோவில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசிர்வாதம் பெற்றார். இந்த நிகழ்வு சமூக வலைதங்களில் வைரலாகி ரஜினி மீது பல்வேறு விமர்சங்களும் முன்வைக்கப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த்
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை சென்று வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது
ஜெயிலர் படத்தை வெற்றி படமாக்கிய தமிழக ரசிகர்களுக்கு நன்றி. ஜெயிலர் படத்தின் ஒவ்வொரு frame-ஐயும் சிறப்பாக செதுக்கிய இயக்குனர் நெல்சனுக்கு நன்றி.
படத்திற்கு சிறப்பாக இசை அமைத்து பிரம்மாண்டமாக வெற்றி பெற செய்த அனிருத்துக்கு நன்றி..
யோகிகள், சன்யாசிகள் இளையவர்களாக இருந்தாலும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். நட்பு ரீதியாக மட்டுமே உத்திர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்டோரை சந்தித்து பேசினேன்.” என்றார்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அரசியல் வேண்டாம் என ரஜினிகாந்த் பதிலளித்தார்.
Tags: அரசியல் செய்திகள்