Breaking News

இஸ்லாமிய மாணவனை சக மாணவர்கள் கொண்டு அடிக்க சொன்ன ஆசிரியர் பள்ளியை இழுத்து மூடி சீல் வைப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

இஸ்லாமிய மாணவனை சக மாணவர்கள் கொண்டு அடிக்க சொன்ன ஆசிரியர் பள்ளியை இழுத்து மூடி சீல் வைப்பு முழு விவரம்

முசாபர்நகரில் உள்ள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை குப்பாபூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு சீல் வைத்தனர், 

உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள கப்பர்பூர் கிராமத்தில் உள்ள ஓர் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், வகுப்பறைக்குள் படிக்கும் மாணவர்கள் அனைவரையும் வரிசையாக வரவைத்து, இஸ்லாமிய மாணவர் ஒருவரை கன்னத்தில் அடிக்க சொல்ல சக மாணவர்களும் ஓவ்வொருவராக வந்து அந்த மானவரை அடித்துள்ளார்கள் , மேலும் ஆசிரியர் மாணவர்களிடம் “ஏன் மெதுவாக அடிக்கிறாய்? வேகமாக அடி’ என கூறுகின்றார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது


உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள மன்சூர்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட குப்பாபூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் சக மாணவர்களிடம் இஸ்லாமிய மாணவனை அடிக்க சொல்கின்றார் 

அந்த வீடியோவில்  மாணவர்கள் தரையில் அமர்ந்திருக்கின்றனர். இஸ்லாமிய  மாணவர் மட்டும் ஆசிரியைக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார். 'Jitne bhi Muslim bachche hai…' என்று ஆசிரியை கூறுகிறார். அந்த மாணவரை அடிக்குமாறு ஆசிரியர் கூறியவுடன் முதலில் ஒரு சிறுமி அந்த மாணவரை அடிக்கிறார். 

அதன்பின்னர் அடுத்தடுத்து பிற மாணவர்கள் அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஏன் இவ்வளவு மெதுவாக அடிக்கிறீர்கள்; வேகமாக அடியுங்கள் என்று ஆசிரியை சொல்வது வீடியோவில் கேட்கிறது. இஸ்லாமிய மாணவரை அடிக்குச் சொல்லும் ஆசிரியர் பெயர் திருப்தா தியாகி. என்றும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டனங்கள் வலுத்து வருகின்றது

வைரல் வீடியோ 

https://twitter.com/PoonamJoshi_/status/1695128859878760509

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

இச்சம்பவம் தொடர்பான விசாரணையின் ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்" என போலீசாரும், "மாணவர் தாக்கப்படும் வீடியோவை யாரும் பகிர வேண்டாம், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம்” என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் கூறியுள்ளது

வீடியோ வைரல் ஆன நிலையில் இதுகுறித்து மன்சூர்பூர் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், 

பள்ளியின் முதல்வரிடம் பேசியதாகவும், வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் காவலர் கூறினார். அதன்படி, ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரி சுபம் சுக்லா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  அவர்கள் 

அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து, பள்ளி போன்ற புனித இடத்தை வெறுப்பின் சந்தையாக மாற்றுவது - இதைவிட மோசமான ஒரு ஆசிரியரால் நாட்டிற்கு எதுவும் செய்ய முடியாது.இதே மண்ணெண்ணையைத்தான் பாஜகவினர் பரப்பி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தீக்கிரையாக்கியுள்ளனர். குழந்தைகள் இந்தியாவின் எதிர்காலம் - அவர்களை வெறுக்காதீர்கள், நாம் அனைவரும் சேர்ந்து அன்பைக் கற்பிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

காவல் கண்காணிப்பாளர் திரு.சத்யநாராயண் பிரஜாபத் அளித்த பேட்டி:-

https://twitter.com/muzafarnagarpol/status/1695102804551934221

வழக்கு பதிவு:-

இந்த நிலையில், தனது வகுப்பறையில் மாணவனை அடிக்குமாறு சக மாணவர்களை அறிவுறுத்திய ஆசிரியர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம் முசாபர்நகர் மூத்த காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது. 

மேலும். எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

வைரல் வீடியோவின் அடிப்படையில் இந்த பிரச்சினையை தானாக முன்வந்து எடுத்துக் கொண்ட தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், துன்புறுத்தப்பட்ட குழந்தை மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேவை என்பதால், குழந்தைகள் நலக் குழுவின் அனைத்து குழந்தைகளையும் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்றும், தேவையான ஆலோசனைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

முசாப்பர் நகர் காவல் நிலையம்:-

சம்மந்த பட்ட பள்ளி ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக முசாப்பர் நகர் காவல் நிலைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது

பள்ளி இழுத்து மூடி சீல் வைப்பு 

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை திரிப்தா தியாகிக்கு சொந்தமானது தான் அந்த பள்ளி அந்த பள்ளியின் பெயர் நேஹா பப்ளிக் பள்ளி ஆகும் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து IPC பிரிவுகள் 323  மற்றும் 504 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கல்விதுறை சார்பாக பள்ளிக்கு சீல் வைக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது  மேலும் ஞாயிறு அன்று பள்ளியை மூடி சீல் வைத்துள்ளார்கள் மேலும் உத்தர பிரதேச கல்வி வாரியத்திடம் இருந்து பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் கல்வி செய்திகள்

Give Us Your Feedback