அடுத்த 7 மாதத்திற்க்கு சென்னை கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து முழு விவரம்
அடுத்த 7 மாதத்திற்க்கு சென்னை கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து முழு விவரம்
சென்னை – எழும்பூர் இடையேயான புதிய ரயில் வழித்தடம் சுமார் ரூ. 279 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய ரயில்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் துவங்க உள்ள காரணத்தால் சென்னை கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையிலான ரயில் சேவை இன்று முதல் அடுத்த 7 மாதத்திற்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த பணிகள் நிறைவுபெற்ற பிறகு ரயில் சேவை மீண்டும் பழையபடி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும், இந்த வழித்தடத்தில் சென்னை கடற்கரை, சென்னை கோட்டை, பூங்கா ஆகிய ரயில் நிலையங்களுக்கான ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது எழும்பூர் கடற்கரை இடையே மேற்கொள்ளப்படும் 4வது ரயில் பாதை அமைக்கும் பணியால் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே மட்டுமே இனி ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதுவும் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை வீதம் 80 மின்சார ரயில் சேவை மட்டுமே இயக்கப்பட உள்ளது. இதனால் பயணிகள் வசதிக்காக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலைய வளாகத்தில் இருந்து இன்று முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்