Breaking News

அமெரிக்காவில் இனவெறி பயங்கரம் 3 கறுப்பினத்தவர்கள் சுட்டுக்கொன்று தானும் சுட்டு தற்கொலை செய்த இளைஞர் A white man fatally shoots 3 Black people dead

அட்மின் மீடியா
0

அமெரிக்காவில் இனவெறி பயங்கரம் 3 கறுப்பினத்தவர்கள் சுட்டுக்கொன்று தானும் சுட்டு தற்கொலை 


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜேக்சன்வில்லி பகுதியில் உள்ள டாலர் ஜெனரல் ஸ்டோரில், ஆகஸ்ட் 26ஆம் தேதி, 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கறுப்பு இன மக்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வெலி பகுதியில் டாலர் ஜெனரல் என்ற இடத்தில் வெள்ளை இனத்தவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கருப்பினத்தவர்கள் மீது சரமாரியாக சுட்டார்.இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண், இரு ஆண்கள் என கருப்பினத்தவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 

எட்வர்ட்ஸ் வாட்டர் பல்கலைக்கழகத்தின் அருகே உள்ள டாலர் ஜெனரல் ஸ்டோர் பகுதியில், மதியம் 2 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று உள்ளது. 

துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், போலீசார் வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய வெள்ளை இனத்தவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback