மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 29 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 29 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும்
அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில் எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.
திருநெல்வேலி மாவட்டம்:-
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட வள்ளியூர் மற்றும் நாங்குநேரி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது.
அதன்படி வள்ளியூர் துணைமின் நிலையத்திற்கு உட்டபட்ட சமாதானபுரம், பூங்கா நகர், இ.பி. காலனி, சண்முகாபுரம்,வடலிவிளை, நல்ல சமாரியன் நகர். லூத்தர் நகர், கேசவனேரி, ராஜாபுதூர், திருக்குறுங்குடி நம்பி தலைவன் பட்டயம்,ஆவரந்தலை, ஏர்வாடி
ராஜாக்கள்மங்கலம்,சிபெருசிறுமளஞ்சி, மளஞ்சி, ஆச்சியூர், வாகை குளம், கோவநேரி உள்ளிட்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
தச்சநல்லூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வவிக்ணேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்து பூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதயநகர் இடங்களில் உள்ளிட்ட மின்வினியோகம் இருக்காது
பெரம்பலூர் மாவட்டம்:-
வேப்பந்தட்டை கை.களத்துார் ப தாலுகா, துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இ அதனால் கை. களத் துார் சிருநிலா, நெற்குணம், நுத்தப்பூர், அய்யனார்பா ளையம், காரியானுார் பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி,காந்தி நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பரா மரிப்பு பணிகள் முடிவ டையும் வரை, மின் வினி யோகம் இருக்காது
மதுரை மாவட்டம்:-
மதுரை வலையங்குளம், திருப்பாலை ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளன.இதனால், ஊமச்சிகுளம், வீரபாண்டி, குலமங்கலம், மாறணி, ஆலத்தூா், கூலப்பாண்டி, போக்குவரத்துநகா் ஆகிய பகுதிகளிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர் மாவட்டம்:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் பழுதான மின்கம்பங்கள் மாற்றும் பணி நடை பெறுவதால் தஞ்சையில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தஞ்சை கரந்தை துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் உயர்அழுத்த மின் பாதையில் பழுதான மின்கம்பம் மாற்றப்பட்டு புதி தாக நடும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
இதனால் சுந்தரம்பிள்ளை நகர், புண்ணியமூர்த்தி தோட்டம், வடக்குவாசல் நாலு ரோடு, குதிரைக்கட்டி தெரு, வேலூர் தெரு, பரத்நகர், குளத்துமேட்டுத் தெரு, வாணிய தெரு, கீரைக்கார தெரு, கொடைக்காரத் தெரு, சேர் வைக்கார தெரு. கரந்தை மார்க்கெட் மானோஜிப்பட்டி, திரு வேங்கட நகர், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், ராம்கோ கார்டன் பாஸ்கரபுரம், கரூப்ஸ் நகர் , மாதாக்கோட்டை பழைய கோவில் தெரு, திருவள்ளுவர் 3-ம் தெரு, 4-ம் தெரு, ஜெயேந்திர சரஸ்வதி நகர் போன்ற பகுதிகளிலும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
Tags: தமிழக செய்திகள்