Breaking News

அமெரிக்காவில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் சடலமாக மீட்பு..! நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

 அமெரிக்காவில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் சடலமாக மீட்பு..!



இந்​தி​யர்​களான கிஷோர் திவன் (89), ஆஷா திவன் (85), ஷைலேஷ் திவன் (86) மற்றும் கீதா திவன் (84) ஆகிய 4 பேரும் அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் வசித்து வந்​தனர்.

இவர்​கள் கடந்த வாரம் மேற்கு வர்​ஜினி​யா​வின் மார்​ஷல் மாவட்​டத்​தில் உள்ள பிரபுப​டாஸ் பேலஸ் ஆப் கோல்டு என்ற புகழ் பெற்ற கோயிலுக்கு காரில் பயணம் செய்​துள்​ளனர். இந்​நிலை​யில் ஜூலை 31-ம் தேதி முதல் அவர்​களை தொடர்​பு​கொள்ள முடிய​வில்லை என குடும்​பத்​தினர் காவல் துறை​யில் புகார் செய்​துள்​ளனர், இந்த வழக்கை ஓஹியோ மாவட்ட போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். 

கடைசியாக அந்தக் குடும்பத்தினர் பென்சில்வேனியாவில் உள்ள பர்கர் கிங் கடைக்குச் சென்றுள்ளனர். கண்காணிப்புக் கேமராவில் நால்வரில் இருவர் உணவகத்தில் நுழைவது பதிவாகி இருந்தது. கடன் அட்டையும் அங்குதான் கடைசியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்களது வாகனம் பிட்ஸ்பர்க் நோக்கி இண்டர்ஸ்டேட் 79ல் சென்றதை கேமராக்கள் காட்டின.அப்போது, பிக் வீலிங் கிரீக் சாலை​யில் அவர்​கள் சென்ற கார் விபத்​தில் சிக்கி இருந்​தது ஆகஸ்ட் 2-ம் தேதி தெரிய​வந்​தது. 

அங்​கிருந்து அந்த 4 பேரின் உடல்​களும் மீட்​கப்​பட்​டன. இந்த தகவலை மார்​ஷல் மாவட்ட அதி​காரி மைக் டவு​கெர்டி தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து போலீ​ஸார்​ வி​சா​ரிக்கின்​றனர்​.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback