Breaking News

தமிழகம் முழுவதும் 26ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடங்கள் முழு விவரம் Private Job Fair in Tamilnadu

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகின்றார்கள்

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.இம் முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வி முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். 

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு  மாவட்ட நிர்வாகம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று நடத்துகிறது. 

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இவர்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை அதிக அளவில் நியமிக்க உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம்:-

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வருகின்ற 26.08.2023 (சனிக்கிழமை) காலை 08.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை நடைபெறவுள்ளது. 

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்” (Tamil Nadu Private Job Portal) www.tnprivatejobs.tn.gov.in வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கரூர் மாவட்டம்:-

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 26.08.2023 அன்று தான்தோன்றிமலை அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் 3000 க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 10ம் வகுப்பு, 12 ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளோமா மற்றும் ஐ டி ஐ படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விரும்பும் வேலையளிப்பவர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் .

புதுக்கோட்டை மாவட்டம்:-

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. 

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்யேக அரங்கம் அமைத்து ஆலோசனை அளிக்கப்பட உள்ளது. 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு:-

https://www.tnprivatejobs.tn.gov.in/Home/job_mela

கிருஷ்னகிரி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 26.08.2023

இடம்:- Government Girls Higher Secondary School, Krishnagiri , Near Krishnagiri Taluk Office
 
நாள்:- 26/08/2023 to 26/08/2023 

நேரம்:- 08:00 AM to 04:00 PM

புதுக்கோட்டை மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 26.08.2023

இடம்:- Kalaingar karunanithi Government Arts College for Women ,Pudukkottai ,Near Bus Stand
 
நாள்:- 26/08/2023 to 26/08/2023 

நேரம்:- 09:30 AM to 04:30 PM

கடலூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 26.08.2023

இடம்:- Government Boys Higher Secondary School ,Cuddalore Main Road
 
நாள்:- 26/08/2023 to 26/08/2023 

நேரம்:- 09:00 AM to 03:00 PM

விருதுநகர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 26.08.2023

இடம்:- Sri Vidhya Arts and Science College ,Virudhunagar
 
நாள்:- 26/08/2023 to 26/08/2023 

நேரம்:- 09:00 AM to 03:00 PM

கரூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 26.08.2023

இடம்:- அரசு கலை கல்லூரி, தான்தோன்றிமலை , கரூர்
 
நாள்:- 26/08/2023 to 26/08/2023 

நேரம்:- 08:00 AM to 03:00 PM

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback