செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நாட்டுவெடிகுண்டு வீசி வெட்டி கொலை
செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த லோகேஷ் என்ற நபரை நீதிமன்ற வாசல் அருகே உள்ள கடையில் வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை தாக்கத் தொடங்கியது.
மேலும் அவர்கள் கொண்டு வந்திருந்த நாட்டு வெடிகுண்டை லோகேஷ் மீது வீசி அரிவாளை வைத்தும் லோக்கேஷை வெட்டி சாய்த்த அந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த இளைஞர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்