Breaking News

பொதுமக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் டிஜிபியிடம் நேரில் புகார் மனு அளிக்கலாம் என அறிவிப்பு

அட்மின் மீடியா
0

வாரநாட்களில் தினமும் காலை 11.30 மணிக்கு பொதுமக்கள் நேரடியாக டிஜிபியிடம் தங்களது மனு புகார்களை கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் காவலர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் அவர்களின் மனுக்களை, திங்கள் முதல் வெள்ளி வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர, தினமும் காலை 11.30 மணிக்கு நேரில் சந்தித்து மனுக்களை பெறுகிறார், மனுக்களை பெறும் இடம் பார்வையாளர்கள் அறை. மேலும் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback