Breaking News

குழந்தைக்கு கை அகற்றப்பட்ட விவகாரம் மருத்துவர், செவிலியர் அலட்சியமே காரணம் பெற்றோர் புகார்

அட்மின் மீடியா
0

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தையின் ஒரு கை அகற்றப்பட்ட விவகாரத்தில் அந்தக் குழந்தையின் பெற்றோர், மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்கள். 


ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. தஸ்தகீர்-திருமதி அஜிஸா தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை முகமது மாஹீர் கடந்த ஜூன் 25-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தலையில் நீர் இருப்பதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில், மருந்து செலுத்துவதற்காக, வலது கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

29.6.2023 அன்று குழந்தையின் வலது கையில் 'ட்ரிப்ஸ்' மூலம் மருந்து செலுத்தப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தனது குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து செவிலியர்களிடம் பலமுறை புகார் கூறியும் அவர்கள் அலட்சியப்படுத்தியதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

எனது குழந்தையின் இந்த நிலைக்கு மருத்துவமனையின் ஒரு செவிலியர்தான் முக்கியமான காரணம். அதேபோல், அன்று பணியில் இருந்த ஒரு மருத்துவரும் இதற்குக் காரணம். அதனால் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.எங்களுக்குப் பின்னணியில் யாரும் கிடையாது. எனது குழந்தைக்கு நடந்ததுபோல் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் நான் இத்தனை போராடுகிறேன் என்றார்

இந்நிலையில் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் இன்று 04.07.2023  காலை 10 மணிக்கு பெற்றோர் விசாரணைக்கு ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback