Breaking News

ரூ. 999 க்கு ஜியோ 4 ஜி போன் மாதம் 123 ரீசார்ஜ் மட்டுமே சிறப்பம்சங்கள் முழு விவரம் jio phone 999

அட்மின் மீடியா
0

 ரூ. 999 க்கு ஸ்மார்ட் போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம் ரூ. 999-க்கு ஜியோ பாரத் என்ற ஃபோனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜியோ போன் இன்டர்நெட் சேவையுடன் 4 ஜி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது



ரிலையன்ஸ் ஜியோவின் சமீபத்திய 4ஜி கைபேசி ரூ.999 முதல் தொடங்குகிறது: 

ரிலையன்ஸ் ஜியோ இன்று 'ஜியோ பாரத்' என்ற புதிய இணைய வசதி கொண்ட கைபேசியை வெளியிட்டது. ஸ்மார்ட்போன் வாங்க முடியாதவர்களை இலக்காகக் கொண்டு, நாடு முழுவதும் இன்னும் ஃபீச்சர் போன்களைப் பயன்படுத்தும் 250 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இணையத்தை அணுகத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.

 ஜியோ பாரத் ஃபோன் பயனர்களுக்கான அடிப்படை ரீசார்ஜ் திட்டம் மாதம் 123 ரூபாய்க்கு தொடங்குகிறது. ரூ.999 விலையில் இணைய வசதியுள்ள ‘ஜியோ பாரத்’ போன்களில், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட மிகக்குறைந்த விலையில் அன்லிமிடெட் கால்ச் மற்றும் 14 GB டேட்டாவிற்கு மாதம் ரூ. 123 இல் தொடங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

திட்டங்கள்:-

123 ரூபாய் திட்டம்:-

ஜியோ பாரத் 4 ஜி போன்கள் மாதம் 123 ரூபாய்க்கு 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிட்டேட் கால்ஸ், 14 ஜிபி இண்டர்நெட் உடன் கொடுக்கப்படுகின்றது

1234 ரூபாய் திட்டம்:-

ஜியோ பாரத் 4 ஜி போன்கள் 1234 ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிட்டேட் கால்ஸ், தினமும் .5 ஜிபி இண்டர்நெட் உடன் கொடுக்கப்படுகின்றது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback