அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் தீவிர புயலாக வலுப்பெறுகிறது முழு விவரம் cyclone biparjoy
அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் வலுப்பெறுகிறது
அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறவுள்ளது!
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் கோவாவுக்கு 920 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது
மேற்கு-தென்மேற்கில் 1100 கி.மீ. தொலைவில்மையம் கொண்டுள்ள புயல் வடக்கில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் -இந்திய வானிலை மையம்
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இப்புயலுக்கு பிபோர்ஜோய் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பிபோர்ஜோய் புயல் கோவாவிற்கு 920 கி.மீ., மேற்கு தென்மேற்கிலும் மும்பைக்கு 1,100 கி.மீ., தென்மேற்கிலும் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது புயலாக வலுப்பெற்று அடுத்த 6 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து கிழக்கு மத்திய அரபிக்கடலில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்