Breaking News

கணவரின் சொத்தில் மனைவிக்கு சம பங்கு உள்ளது – உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

கணவர் வாங்கும் சொத்தில் மனைவிக்கு சம பங்கு உள்ளது என உயர்நீதிமன்றம் உத்தரவு.



குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என ஓய்வில்லாமல் குடும்பத் தலைவிகள் பார்க்கும் வேலைகள், 24 மணி நேர வேலை எனவும், கணவரின் 8 மணி நேர பணியுடன் அதை ஒப்பிட முடியாது என கருத்து தெரிவித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது

வெளிநாட்டில் வேலை செய்து வாங்கிய சொத்துக்களில் தனது மனைவிக்கு உரிமை இல்லை என்று கணவர் சென்னையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வீட்டில் இருக்கும் பெண்கள் செய்யும் பணியை கணவனின் பணியோடு ஒப்பிட முடியாது. 

குடும்பத்தை கவனித்து, நேரடியாகவோ, மறைமுகமாகவோ இல்லத்தரசிகள் அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து எந்த சட்டமும் இயற்றப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, அந்த பங்களிப்பை நீதிமன்றம் அங்கீகரிப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் இருக்கும் பெண்கள் 24 மணி நேர பணி ஆனால் கணவரது பணி 8 மணிநேரம் மட்டும் தான். குழந்தைகளை கவனிப்பது, குடும்ப நிர்வாகம் என இல்லத்தரசிகள் 24 மணி நேரமும் வேலை பார்க்கின்றனர்.மனைவி குடும்பத்தை கவனிப்பதால் தான் கணவரால் தனது பணியை செய்ய முடிகிறது. 

பணம் சம்பாதித்து கணவர் வழங்கினாலும் குடும்பத்தை கவனித்து தனது பங்களிப்பை மனைவி வழங்குகிறார். எனவே கணவர் வாங்கும் சொத்தில் மனைவிக்கு சம பங்கு உள்ளது என தெரிவித்த நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback