பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆவண எழுத்தர்கள் நுழைய தடை முழு விவரம்
தமிழகம் முழுவதும் அனைத்து பதிவுத் துறை அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. பதிவுத்துறையில் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகை ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பதிவு துறையை மேம்படுத்த ஸ்டார் 3.0 என்னும் பதிவுத்துறை செயலி விரைவில் கொண்டு வரப்படும் என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் பதிவுத்துறை தலைவரிடம் புகார் தரலாம் எனவும், பத்திர பதிவுக்கு வருபவர்கள் பணம் கொண்டுவர தேவையில்லை, ஏடிஎம் கார்டு மூலமே பதிவு கட்டணத்தை செலுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அலுவலக நிமித்தமாக சார் பதிவாளரால் அழைக்கப்பட்டால் மட்டுமே தவிர, மற்றபடி ஆவணம் எழுதுவோர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வரக்கூடாது.விதிகளை மீறுவோர் மீதும் , கண்காணிக்க தவறும் சார்பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்