Breaking News

மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ் முழு விவரம்

அட்மின் மீடியா
0

மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ் முழு விவரம்

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அவர்களுடன் மத்திய அரசின் சார்பில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை ஜூன் 15ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.

பாலியல் புகார்:-

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றசாட்டுக்களை முன்வைத்தும், அவரை கைது செய்ய வேண்டும்  என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கு பதிவு:-

போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த பின்னரும் வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னரே பிரிஜ் பூஷன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது

போராட்டம்:-

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தற்போதை தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக பாலியல் குற்றசாட்டுக்களை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர்.அப்போது மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

விசாரணைக் குழு அமைக்கப்பட்ட பின்னரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைக் கண்டித்து இம்மாத தொடக்கத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். நாடளுமன்ற திறப்பு விழாவன்று "மஹிளா மகாபஞ்சாயத்" என்ற பெயரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த முடிவெடுத்து நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக செல்ல முயற்சித்தனர்

ஆனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் பேரணியாக சென்றனர். அப்போது, தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். 

போராட்டம் தொடர்பாக மல்யுத்த வீரர்களின் போராட்ட ஏற்பாட்டாளர்கள் மற்றும் பலர் மீது டெல்லி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 5 முக்கிய கோரிக்கைகளை மல்யுத்த வீரர்கள் முன்வைத்தனர். பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பான விசாரணை ஜூன் 15ஆம் தேதிக்குள் முடிக்கவேண்டும்.மல்யுத்த வீரர்களுக்கு எதிரான அனைத்து எஃப்ஐஆர்களையும் திரும்பப் பெற வேண்டும் .இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு சுதந்திரமான நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும், என கோரிக்கை வைக்கப்பட்டது அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பஜ்ரங் புனியா

பிரிஜ் பூஷண் வழக்கில் ஜூன் 15-க்குள் போலீஸ் விசாரணை முடிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஜூன் 15-ம் தேதி வரை போராட்டத்தை நிறுத்திவைக்குமாறு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வேண்டுகோள் விடுத்தார்.அனுராக் தாக்கூர், பஜ்ரங் புனியாநாங்களும், மல்யுத்த வீராங்கனைகள் மீதான எஃப்.ஐ.ஆர்-களை நீக்குமாறு கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். எனவே, ஜூன் 15 வரை போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. ஒருவேளை ஜூன் 15-க்குள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், போராட்டத்தை நாங்கள் தொடர்வோம்" என்று கூறினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback