நீட் தேர்வில் 720 மதிப்பெண் எடுத்து சாதித்த தமிழ்நாட்டு மாணவர்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியமாகும் இந்த 2023 ம் ஆண்டு தேர்வு கடந்த மே மாதம் 7-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது.
தற்போது இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட்நுழைவு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மாணவர்கள் நீட் தேர்வின் முடிவுகளை neet.nta.nic.in ntaresults.nic.in இணையதளங்களில் பார்க்கலாம்.
இந்த தேர்வில் தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் 99.99% மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
அதே போல் ஆந்திராவின் போரா வருண் என்ற மாணவனும் முதலிடம் பிடித்துள்ளார்.
முதல் 10 இடத்தை பிடித்த மாணவர்களில் 4 மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் ஜெகதீஷின் மகன் பிரபஞ்சன் இன்று வெளியான் நீட் தேர்வு முடிவில் 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.
Tags: தமிழக செய்திகள்