Breaking News

ஒடிசாவில் மீண்டும் துயர சம்பவம்.. சரக்கு ரயிலில் 6 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு

அட்மின் மீடியா
0

ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் ரயில்நிலையத்தில் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது

ஒடிசாவில் கடந்த 2 ம்தேதி நடைபெற்ற 3 ரயில்கள் மோதிய விபத்தில் 288பேர்  உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த சோகமான மூன்று ரயில் விபத்து நடந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் வந்துள்ளது. 

ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் சந்திப்பு பகுதியில் ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மழை பெய்ததால் ரயில் பெட்டிக்கு கீழே ஒதுங்கியுள்ளனர் அந்த நேரத்தில் ரயில் புறப்பட்டதால் அவர்கள் மீது சக்கரம் ஏறி உயிரிழந்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது மேலும் இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர் எனவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் விபத்து குறித்து மேற்கொண்டு விசாரனை நடைபெற்று வருகின்றது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback