செந்தில் பாலாஜிக்கு ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள்.. பைபாஸ் சர்ஜரி செய்ய பரிந்துரை
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அதிகாலை அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படும் போது, நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். மருத்துவர்களின் ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி, வயது 47 அவர்களுக்கு இருதய ரத்த நாள பரிசோதனை 14.06.2023 அன்று காலை 10.40 மணியளவில் செய்யப்பட்டது.
அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்லது
மேலும் மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் குழு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்