Breaking News

கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய பெண் என பரவும் வீடியோ உண்மை என்ன Tattooing Husband's Name On Forehead Is Fake

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கணவரின் பெயரை தனது நெற்றியில் பச்சை குத்திய பெங்களூரை சேர்ந்த பெண்! என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ பெங்களுருவில் இருக்கும் டேட்டூ போடும்  கடை சும்மா விளம்பரத்திற்க்காக எடுத்தது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-

நெற்றியில் பச்சை குத்தியதாக வெளியான வீடியோவில் உள்ள கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோ என இருந்தது அடுத்து அந்த பெயரை கூகுளில் தேடியதில் அவர்கள் இன்ஸ்டா ஜடி கிடைத்தது அதில் உள்ள தொலைப்பேசி எண்ணிற்கு போன் செய்தபோது 

கிங் மேக்கர் டாட்டூ ஸ்டுடியோவின் உரிமையாளர் நான் தான். எனது பெயர் சதிஷ் என்றும் நெற்றியில் பச்சை குத்திக்கொண்டதாக வெளியான வீடியோவில் உள்ள பெண் எனது மனைவி ரக்ஷா என்றும்  எனது மனைவி உண்மையில் பச்சை குத்திகொள்ளவில்லை என்றும் பச்சை குத்துவது போல் எடுக்கப்பட்ட அந்த வீடியோ  விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என கூறினார்

முடிவு:-

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.instagram.com/p/CsbSwl9OuiS/ 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback