Breaking News

RTE மூலம் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு சீருடை புத்தகங்களை அரசுதான் வழங்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

ஆர்டிஇ ஒதுக்கீட்டில் சேரும் தனியார் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு புத்தகம், சீருடை கட்டணங்களை வழங்க வேண்டியது அரசின் கடமை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆர்டிஇ கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகங்களை அரசுதான் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தமிழகத்தில் சிறுபான்மையினர் பள்ளிகள் அல்லாத, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படிக்க சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் கல்விக் கட்டணத்தை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசே வழங்கி வருகிறது

அவ்வாறு தனியார் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியாவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த ஆண்டுக்காண ஆன்லைன் விண்ணப்பம் ஏப்ரல் 20 ம்தேதி தொடங்கி மே 18 ம்தேதி முடிந்தது

இந்நிலையில் வேலூரில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்று கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவரிடம் சீருடை, மற்றும் புத்தகங்களுக்கு ரூ.11,977  செலுத்த வேண்டும் என கேட்டுள்ளது.

தனியார் பள்ளி நிர்வாகத்தின் கட்டணத்தை எதிர்த்து, மாணவரின் தந்தை மகாராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கல்விக் கட்டணத்தை ஏற்கும் அரசுதான், மாணவர்களுடைய சீருடை மற்றும் புத்தகங்களுக்கான கட்டணத்தையும் ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது அரசின் கடமை என்று தெரிவித்துள்ள நீதிமன்றம் இது தொடர்பாக அதிகாரிகளுக்கு 2 வாரங்களில் உரிய அறிவுரை வழங்க பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback