Breaking News

கர்நாடகத்தில் யார் ஆட்சி ? வாக்கு எண்ணிக்கை முண்ணனி யார்? முழு நிலவரம் Karnataka Election Results 2023

அட்மின் மீடியா
0

கர்நாடகத்தில் யார் ஆட்சி ? வாக்கு எண்ணிக்கை முண்ணனி யார்? முழு நிலவரம் Karnataka Election Results 2023 



2018 தேர்தல்:-

224 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவை 2018 ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் 110 இடங்களில் பாஜக, 78 இடங்களில் காங்கிரஸ்,ஜனதாதளம் 37 இடங்களில் வெற்றி பெற்றது, 110 இடங்களில் வென்ற பா.ஜ.க. 6 சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.  எடியூரப்பா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். 

சட்டமன்ற வாக்கெடுப்பில் எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. பொறுப்பேற்ற 3 நாளில் ராஜினாமா செய்தார் எடியூரப்பா. 

அதன்பின்பு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டனி அமைத்து  குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார் ஆனால் 14 மாதத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு மீண்டும் பாஜக  பசவராஜ் பொம்மை தலைமையில் ஆட்சியமைத்தது.

2023 தேர்தல்:-

கர்நாடகா மாநிலத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது

கர்நாடகாவில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பல வியூகங்களை வகுத்து வருகிறது. 

அதேபோல் காங்கிரஸ் கட்சி இழந்த ஆட்சியை பிடித்து மீண்டும் ஆட்சி அரியணையில் அமர தீவிர தேர்தல் பிராசாரத்தில் ஈடுபட்டது.

கர்நாடக தேர்தலில் பா.ஜ., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனைப்போட்டி நிலவுகின்றது


காலை 8.45 மணி நிலவரப்படி 

பாஜக கட்சி 80 தொகுதிகளில் முண்ணனி பெற்றுள்ளது

காங்கிரஸ் 120 தொகுதிகளில் முண்ணனி பெற்றுள்ளது

மதசார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளில் முண்ணனி பெற்றுள்ளது


காலை 2.00 மணி நிலவரப்படி 

பாஜக கட்சி 65 தொகுதிகளில் முண்ணனி பெற்றுள்ளது

காங்கிரஸ் 135  தொகுதிகளில் முண்ணனி பெற்றுள்ளது

மதசார்பற்ற ஜனதா தளம் 20 தொகுதிகளில் முண்ணனி பெற்றுள்ளது


Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback