Breaking News

ஹஜ் கமிட்டியில் ஹாஜிகளுக்கு வழங்கிய சூட்கேசில் பன்றியின் உருவம் என பரவும் செய்தி உண்மை என்ன hajj suitcase pig logo

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  இந்திய ஹஜ் கமீடி மூலம் ஹாஜிகளுக்கு கொடுக்கப்பட்ட லோகோ பேக் அதில் பன்றியின் உருவம் பொறிககப்பட்டு ஹாஜிகளை கேவலம் படுத்தி உள்ளனர் காவிகள் இது வன்மையாக கண்டிப்பதுடன் யார் இதர்க்கு காரணம் என்று விசாரணை தேவை...,முகநூலில் அதிக அதிகமாக ஷேர் செய்து நம் எதிர்பபை பதிவு செய்யவும் என்று  ஒரு  புகைப்படத்துடன் செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினர் குணங்குடி ஆர் எம் அனிபா அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபொழுது

நானும் அந்த புகைப்படத்தை பார்த்தேன் 

தமிழ்நாடு அரசு ஹஜ் குழு உள்பட  இந்தியாவில் இதுவரை எங்கும்  ஹஜ் பயணிகளுக்கு உடமைகள் பேக் இதுவரை வழங்கபட வில்லை என்றும் மேலும்  2023 ஆண்டு ஹஜ் பயணிகள் தங்கள் செலவில் பேக் வாங்கி கொள்ள வேண்டும் என்பதுதான் இந்திய அரசு ஹஜ் கமிட்டி அறிவிப்பாகும் என்று கூறினார் மேலும் ஹஜ் பயணத்திற்க்கு இன்னும் 1 மாதம் உள்ளது எனவும் கூறினார்

மேலும் தமிழகத்தில் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்பவர்களுக்கு எந்த ஆண்டும் சூட்கேஸ் வழங்குவதும் இல்லை எனறு கூறினார்

உண்மை நிலை இப்படி இருக்க இந்திய ஹஜ் கமிட்டி மூலம் ஹாஜிகளுக்கு கொடுக்கப்பட்ட பேக் லோகோவில் பன்றியின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது என ஏதோ ஒரு புகைப்படத்தை ஹஜ் கமிட்டி அளித்தது என பொய்யாக பரப்புகின்றார்கள் என கூறினார் மேலும் அந்த தவறான புகைப்படம் குறித்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாகவும் கூறினார்

முடிவு:-

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback