Breaking News

மேற்கு வங்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்குத் தடை மம்தா பானர்ஜி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
மேற்கு வங்கத்தில் வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்குத் தடை விதிப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்

 

கேரள மாநிலம், காசர்கோடு பகுதியில் நர்சிங் கல்லூரியின் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளை ஒரு இஸ்லாமிய பெண் மூளைச் சலவை செய்து இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றி, தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் குழுப்பில் இணைப்பது போன்று அப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது

இந்த படத்திற்க்கு எதிர்ப்பு கிளம்பியது படத்தை தடை செய்யக் கோரி, நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டது.ஆனால் நீதிமன்ரம் தடைவிதிக்கமறுத்தது பலத்த எதிர்ப்புக்கிடையில் கடந்த மே 5-ம் தேதி வெளியானது திரைப்படம்

தமிழகத்தில் இந்த படத்துக்கு எதிர்ப்பு இருந்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில் மால்களிலும் படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது

மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான மத்தியப்பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு அளித்து அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மீது உத்தரவிட்டார்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாநிலத்தில் வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்க்கவும், மேற்கு வங்கத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback