Breaking News

மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் தமிழ்நாடு அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து விரைவுபடுத்தவும், சில மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டதில் மாற்றங்கள் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசானையில்:-

கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

நாகை, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டுமே பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் கே.என். நேரு, தேனிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

கோவை வருவாய் மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் வளர்ச்சி பணியை துரிதப்படுத்தி, இயற்கை சீற்ற நேரத்தில் அவசரகால பணிகளை மேற்கொள்ளவும், நலத்திட்டங்களை கண்காணிக்கவும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback